சினிமா

இத்தனை கோடி வசூலா!

கடந்த வாரம் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று குபேரா. இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.

மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

ஆனால், தெலுங்கில் இப்படம் அமோக வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட்டாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் வெற்றியை படக்குழு இணைந்து கொண்டாடியுள்ளனர்.

இந்த நிலையில், உலகளவில் குபேரா திரைப்படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் கடந்த 4 நாட்களில் ரூபா 90 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரூபா 15.5 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

முதல் படத்திற்காக கற்றுக்கொள்ளும் முக்கிய விஷயம்

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக கூலி திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம்…