உலகம்

கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய எரிபொருள் விலைகள் கணிசமாக குறைந்துள்ளன.

இதன்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 2.69 அமெரிக்க டொலர்கள் (3.76%) குறைந்து 68.79 டொலர்களாக பதிவாகியுள்ளது. இது ஜூன் 11, 2025க்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த விலையாகும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு முயற்சிப்பதாக எழுந்த அச்சத்தால் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக, நேற்று (23) உலகளாவிய எரிபொருள் விலைகள் 3% உயர்ந்து, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 79 டொலர்களை நெருங்கியது.

ஈரான், ஓபெக் அமைப்பின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக இருப்பதால், பதற்றங்கள் தணிவது அதன் எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்கவும், விநியோக இடையூறுகளைத் தடுக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை, இந்த புவிசார் பதற்றங்களால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் எரிபொருள் தொடர்பான நெருக்கடி ஏற்படும் பட்சத்தில், அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து எண்ணெய் மாதிரிகளை பரிசோதிக்கவும் CPC திட்டமிட்டுள்ளது.

இந்த உலகளாவிய எண்ணெய் நெருக்கடியின் தாக்கம் வரவிருக்கும் ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உணரப்படலாம் என்று CPC மதிப்பிடுகிறது.

What's your reaction?

Related Posts

பிலிப்பைன்ஸில் பாரிய குப்பை மேடு சரிவு – ஒருவர் மரணம், 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் இன்று வெள்ளிக்கிழமை செபு நகரத்தின் பிரிகி பினாலிவ் நகரில் பினாலிவ் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட சரிலு காணரமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 38 பேர் காணாமல்போயுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக அந்நாட்டு அரசு…