இலங்கை

விசேட வைத்தியரின் பிணை மனு நிராகரிப்பு

இலஞ்சக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களின் பிணை மனுக்களை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) நிராகரித்தது.

சந்தேக நபர்களை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மேலும் உத்தரவிடப்பட்டது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…