No products in the cart.
மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான கனேடியர்கள்: அரசு நடவடிக்கை
இஸ்ரேல் ஈரான் மோதலுக்கிடையே, நூற்றுக்கணக்கான கனேடியர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள் நாடு திரும்பியுள்ளார்கள்.
மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான கனேடியர்கள்: அரசு நடவடிக்கை | Govt Assist To Canadians Left From Middle East
ஆனால், இன்னமும் ஆயிரக்கணக்கானோர் மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரக்கணக்கான கனேடியர்கள் சுமார் 6,000 கனேடியர்கள் மற்றும் கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள் இன்னமும் இஸ்ரேல் மற்றும் West Bank பகுதியில் இருப்பதாக Global Affairs Canada (GAC) அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான கனேடியர்கள்: அரசு நடவடிக்கை | Govt Assist To Canadians Left From Middle East
இவர்கள்போக, மேலும் 5,500 ஈரானிலிருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், அண்டை நாடுகள் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளிலிருக்கும் கனேடியர்களை கனடாவுக்கு அழைத்துவர கனடா அரசு விமானங்களை ஏற்பாடு செய்துவருவதாக கனடா வெளி விவகாரங்கள் துறை அமைச்சரான அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.