No products in the cart.
மெக்ஸிகோவில் துப்பாக்கிச் சூடு – 12 பேர் பலி
மெக்ஸிகோவின் குவான்ஜுவாதோ மாநிலம் சால்வாத்தியேர்ரா பகுதியில் நடந்த ஒரு நிகழ்வில் ஆயுதங்களுடன் நுழைந்த சில மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 12 பேர் உயிரிழந்ததோடு, 20 பேர் காயமடைந்தனர்.
தாக்குதலுக்கு முன் சிலர் விழாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பின்னர் அவர்கள் ஆயுதங்களை எடுத்துவந்து விழாவில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குவான்ஜுவாதோ உள்ளிட்ட பகுதிகளில் மதவிழாக்கள், பொது நிகழ்வுகள், விடுதிகள் போன்ற இடங்களில் கூட பாதுகாப்பு மிகக் குறைவாக உள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெக்ஸிகோ பாதுகாப்பு பிரிவு முன்னெடுத்து வருகின்றனர்.