உலகம்

எரிமலையில் விழுந்த இன்ஸ்டா பிரபலம் – 4 நாட்களுக்கு பின் சடலம் மீட்பு

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ஜூலியானா மரின்ஸ் (வயது 26). இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர் வெளிநாடுகளுக்கு சென்று வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவரை சுமார் 3½ இலட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இந்தநிலையில் ஜூலியானா இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றார். தொடர்ந்து அங்குள்ள 3,500 மீற்றர் உயரம் கொண்ட எரிமலை சிகரமான ரின்ஜானிக்கு கடந்த 22ஆம் திகதி சாகச குழுவினர் மலையேற்ற சாகசத்தில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக எரிமலையில் இருந்து இராட்சத பள்ளத்தாக்கில் சுமார் 600 அடியில் தவறி விழுந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆளில்லா விமானம் மூலமாக அவர் இருக்கும் இடத்தை கண்காணித்தனர். அப்போது மண்ணில் சிக்கி அவர் உயிருக்கு போராடி வந்தது தெரிந்தது. தொடர்ந்து கயிறு கட்டி கீழே இறங்கி மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனால் அவர் 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு, மீட்பு பணி தொடர்ந்து நடந்து வந்த நிலையில், ஜூலியானாவின் உடலை 4 நாட்களுக்கு பிறகே மேலே கொண்டுவர முடிந்தது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…