இலங்கை

தனுஷ்கோடியில் இலங்கை வாலிபர்கள் மூவர் அகதிகளாக தஞ்சம்

இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி மணல் தீடையில் 3 இலங்கையர்கள் சுற்றி திரிவதாக கடலோர காவல்படை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து குறித்த மூவரையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

அப்போது அவர்கள் இலங்கை பேச்சாளை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு தஞ்சமாக வந்தோம் என தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அகதிகளாக வந்த 3 பேர் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என உளவுத்துறை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் பின் அவர்கள் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…