No products in the cart.
கனடாவில் இந்த வகை பவர் பாங்க் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
கனடாவில் சீன மின்னணு நிறுவனம் அன்கர் (Anker) தயாரித்த சில பவர் பாங்க் மாடல்களை தீ அபாயம் ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் இந்த பவர் பாங்குகளை மீளப்பெற்றுக்கொள்ளும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கனடிய சுகாதார முகவர் நிறுவனம் இது தொடர்பிலான எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் இந்த வகை பவர் பாங்க் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை | Anker Power Banks Recalled Due To Fire
அபாயகரமான மாடல்கள்:
- Anker Power Bank – மாடல் எண் A1647 – 20,000mAh, உள்ளமைக்கப்பட்ட USB-C கேபிள்
- Anker Zolo Power Bank – மாடல் எண் A1681 – 20K, 30W, USB-C மற்றும் Lightning கேபிள்கள்
- Anker Zolo Power Bank – மாடல் எண் A1689 – 20K, 30W, USB-C கேபிள் இந்த சாதனங்களில் உள்ள லித்தியம்-அயன் பேட்டரிகள் அதிக வெப்பம் அடைந்து தீப்பற்றும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாடல்களை உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்தி, புதிய பதிலாக மாற்றம் அல்லது இணையதள வவுச்சர் பெற அன்கர் நிறுவனத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.