விளையாட்டு

‘கேப்டன் கூல்’ வாசகத்தை பதிவு செய்கிறார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணி தலைவர் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக 3 கிண்ணங்களை வென்ற கொடுத்த அணி தலைவர் ஆவார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த இவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் அன்பாக அழைக்கும் ‘கேப்டன் கூல்’ வாசகத்தை டிரேட்மார்க் (Trademark) ஆக பதிவு செய்ய தோனி விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பம் ஜூன் 5, 2023 அன்று இந்திய டிரேட்மார்க் ரிஜிஸ்ட்ரி மூலம் ஆன்லைனில் தாக்கல் செய்யப்பட்டது.

‘கேப்டன் கூல்’ என்ற பெயர் 2007 டி20 உலகக் கிண்ணம், 2011 ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளின் போது பிரபலமானது.

இந்த டிரேட்மார்க் மூலம், தோனி தனது பிராண்ட் அடையாளத்தை பாதுகாக்கவும், வணிக வாய்ப்புகளை விரிவாக்கவும், குறிப்பாக விளையாட்டு பயிற்சி, ஆடை, மற்றும் டிஜிட்டல் துறைகளில் தனது பெயரைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

இந்த டிரேட்மார்க்கிற்கு 2021 இல் பிரபா ஸ்கில் ஸ்போர்ட்ஸ் (Prabha Skill Sports) என்ற நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இதே பெயரை அந்த நிறுவனம் பதிவு செய்ய முயன்றது. ஆனால், தோனியின் புகழ், ஊடக கவரேஜ் மற்றும் ரசிகர்களின் அங்கீகாரம் காரணமாக, இந்தப் பெயர் தோனியுடன் மட்டுமே தொடர்புடையது என டிரேட்மார்க் ரிஜிஸ்ட்ரி ஏற்றுக்கொண்டது.

இதன் மூலம் தோனியின் அனுமதி இல்லாமல் வேறு எந்த நிறுவனமும் வணிக நோக்கத்திற்காக இந்த வாசகத்தை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…