சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (02) இடம்பெறவுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இலங்கை அணிக்கு சரித் அசலங்க தலைமை தாங்குவதுடன், பங்களாதேஷ் அணிக்கு மெஹிடி ஹசன் மிராஸ் தலைமை தாங்கவுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.