இலங்கை

அணுசக்தி விபத்து – முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை ஸ்தாபிக்க நடவடிக்கை

அணுசக்தி விபத்தின் போது நாட்டிற்கு ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை ஸ்தாபிக்க சர்வதேச அணுசக்தி முகமையுடன் இணைந்து செயற்பட இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை திட்டமிட்டுள்ளது.

குறித்த கட்டமைப்பின் ஊடாக நாட்டிற்கு அருகிலுள்ள நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்களில் ஏற்படும் இயற்கையான அல்லது செயற்கை விபத்துகளின் போது நாட்டிற்குள் வரும் கதிர்வீச்சை அவதானிக்க முடியும் என வலுசக்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காடப்பட்டுள்ளது.

கற்பிட்டி, மன்னார், நெடுந்தீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் இந்த கட்டமைப்புகள் நிறுவப்படவுள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆய்வு மற்றும் அமுலாக்கப்பிரிவின் பணிப்பாளர் பிரகீத் கடதுன்ன தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…