கனடா

கனடா ஸ்கார்பரோவில் இருவர் மர்மமாக உயிரிழப்பு

கானடாவின் டொரொண்டோ நகரில் உள்ள ஸ்கார்பரோவில் புதன்கிழமை இரவு இருவர் மரணமடைந்த நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிர்ச்மவுண்ட் மற்றும் செல்வுட் சாலைகளுக்கருகே உள்ள ஐயான் வியூப் பகுதியில், கிழக்கு எக்லிங்டன் அவென்யூவிற்கு தெற்கே அமைந்த முகவரியில் மாலை 6.30 மணியளவில் டொரொண்டோ போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு சென்ற போலீசார், இரண்டு வயது வந்த ஆண்கள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்தனர்.

கனடா ஸ்கார்பரோவில் இருவர் மர்மமாக உயிரிழப்பு | 2 Men Found Dead In Scarborough

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதற்கான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என சமூக ஊடகத்திலுள்ள ஒரு பதிவில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தகவல்கள் இருப்பவர்களிடம், 416-4100 என்ற எண்ணில் டொரொண்டோ போலீசாரை அல்லது பெயர் கூறாமல் Crime Stoppers-ஐ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…