இலங்கை

12 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (07) 12 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த துணை மின் நிலையத்தால் விநியோகிக்கப்படும் குழாய்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8:30 மணி முதல் மாலை 8:30 மணி வரையிலான காலப்பகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக அந்த சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் பிரதேசங்கள்,

பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க / சீதுவை நகர சபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டுநாயக்க, மினுவாங்கொடை பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை பகுதியின் ஒரு பகுதி.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…