இலங்கை

இலங்கை வங்கி திறைசேரிக்கு 5 பில்லியன் ரூபா பங்கிலாபப் பங்களிப்பு

நாட்டின் முதன்மையான அரசுக்குச் சொந்தமான வணிக வங்கிகளில் ஒன்றான இலங்கை வங்கியின் (BOC) பணிப்பாளர் சபையானது, அதன் ஒரே பங்குதாரரான பொது திறைசேரிக்கு ரூபா 5 பில்லியன் பங்கிலாபப் பங்களிப்பை அங்கீகரித்துள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

முந்தைய ஆண்டில் அதன் விதிவிலக்கான நிதி செயலாற்றுகையினைத் தொடர்ந்து, தேசிய பொருளாதாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற வங்கியின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்த தீர்மானம் பிரதிபலிப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பங்களிப்பு குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பானது, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் வைத்து, இன்று (03) திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவிடம் கையளிக்கப்பட்டது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…