விளையாட்டு

5 பந்தில் 5 விக்கெட் : வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து வீரர்

அயர்லாந்தில் உள்நாட்டு T20 தொடர் நடந்து வருகிறது. இதில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்களைக் குவித்தது. அணித் தலைவர் கர்டிஸ் காம்பெர் 44 ஓட்டங்களையும், பீட்டர் மூர் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 11 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 78 ஓட்டங்களை எடுத்திருந்தது.12வது ஓவரை கர்டிஸ் காம்பெர் வீசினார். இதன் கடைசி 2 பந்தில் வில்சன், கிரஹாம் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். மீண்டும் 14ஆவது ஓவரை வீசிய கர்டிஸ், முதல் பந்தில் மெக்பிரைனை (29) ஆட்டமிழக்கச் செய்து ஹெட்ரிக் சாதனை படைத்தார். தொடர்ந்து 2 மற்றும் 3ஆவது பந்தில் மில்லர், ஜோஸ் ஆகியோரின் விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.

இதனால் நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி 88 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது . மன்ஸ்டெர் ரெட்ஸ் அணி 100 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், அயர்லாந்தின் கர்டிஸ் காம்பெர் 5 பந்தில் 5 விக்கெட் சாய்த்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார்.

ஏற்கனவே, கர்டிஸ் காம்பெர் கடந்த 2021இல் நெதர்லாந்துக்கு எதிராக T20 போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

WTC 2025 இறுதிப்போட்டி – தென்னாபிரிக்கா அணிக்கான வெற்றி இலக்கு இதோ!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி ஜூன் 11 முதல் 15 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது, இதில் அவுஸ்திரேலியா மற்றும் தென்…