No products in the cart.
வேள்பாரி என்னுடைய கனவுப் படமாக இருக்கிறது : இயக்குனர் ஷங்கர்
விகடன் பிரசுரத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில், வேள்பாரி புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ‘வேள்பாரி 1,00,000’ வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இந்த விழாவில் நாவலாசிரியர் சு.வெங்கடேசன், நடிகை ரோகிணி, இயக்குனர் ஷங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் பேசியதாவது:
எனது முதல் கனவுப் படமாக எந்திரன் இருந்தது. தற்போது எனது கனவுப் படம் வேள்பாரி.
நிச்சயம் இது உலகம் போற்றும் தமிழ் படைப்பாக வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.
கனவு மெய்ப்படும் என நம்புகிறேன்.
புது புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தக்கூடிய கதையாக இருக்கிறது வேள்பாரி.
கேம் ஆப் த்ரோன்ஸ், அவதார் மாதிரி உலகம் போற்றக் கூடிய அறிவுப்பூர்வமான, ஜனரஞ்சகமான காவியமா, ஒரு பெருமை மிக்க இந்திய, தமிழ் படைப்பாக வரக்கூடிய சாத்தியம் இதில் இருக்கிறது என தெரிவித்தார்.