No products in the cart.
19 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரைக்கு வரும் எஸ்.ஜே.சூர்யாவின் படம்
தமிழ் சினிமாவில் பெரிய படங்களே தோல்வியை தழுவி கொண்டிருக்கும் சூழலில், ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றிவாகை சூடிய முன்னணி நடிகர்களின் பழைய திரைப்படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் குவித்து வருகிறது.
அந்தவகையில் தமிழ்வண்ணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா – நயன்தாரா நடிப்பில் 2006-ம் ஆண்டில் வெளியான ‘கள்வனின் காதலி’ திரைப்படம், 19 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரைக்கு வருகிறது.
பெண்களை போகப்பொருளாக நினைக்கும் ஒருவன், உண்மை காதலால் எப்படி மாறுகிறான்? என்பதை கதைக்களமாக கொண்ட இந்த படம், ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. யுவன்சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும் கவனம் ஈர்த்தன. இந்த படம் விரைவில் ரீ-ரிலீசுக்கு வருகிறது.
இந்த படத்தை நவீன தொழில்நுட்பத்தில் ரோசிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து சுதாகர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம், தமிழகத்தில் தலா 50இற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட உள்ளது.