No products in the cart.
மூன்றாவது கணவரின் ரியாக்ஷன் இதுதான்
உலக புகழ் பெற்ற நடிகைககளில் ஒருவர் ஸ்கார்லெட் ஜோஹன்சன். இவர் லூசி, அவென்ஜ்ர்ஸ் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அவென்ஜ்ர்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்தான் ஜுராசிக் வேர்ல்ட் ரீபிர்த். இப்படத்தில் பிரபல நடிகர் ஜோனாதன் பைலி என்பவருடன் இணைந்து ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடித்திருந்தனர்.
இப்படத்தின் பிரிமியர் நிகழ்ச்சியின் போது, ரெட் கார்பெட்டில் தனது கணவர் முன்பே நடிகர் ஜோனாதன் பைலிக்கு முத்தம் கொடுத்தார்.
நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் தனது கணவர் முன்னிலையில் தனது சக நடிகரை முத்தமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அன்பை அனைத்து வகையிலும் வெளிப்படுத்துவதை நன் நம்புகிறேன். ‘உங்கள் நண்பர்களை முத்தமிட முடியாவிட்டால், என்ன பயன்?’ என்று அவர் கூறுகிறார். ‘வாழ்க்கை மிகவும் குறுகியது, அதை அடக்கி வைக்க முடியாது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்கார்லெட் ஜோஹன்சன் கடந்த 2008 ஆம் ஆண்டு Ryan Reynolds என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின் 2011 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். இதன்பின், Romain Dauriac எனும் French journalist ஒருவரை 2014 திருமணம் செய்த ஸ்கார்லெட் ஜோஹன்சன், 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். 2020 ஆம் ஆண்டு Colin Jost என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், தனது மனைவி ஸ்கார்லெட் ஜோஹன்சன் சக நடிகரை முத்தமிட்டது குறித்து Colin Jost வெளிப்படையாக பேசியுள்ளார். மக்கள் உண்மையிலேயே அதை மிகைப்படுத்திப் பேசுகிறார்கள். யாராவது ஒருவர் தங்கள் நண்பரை முத்தமிடும்போது. அது மிகவும் முட்டாள்தனம், என்று Colin Jost கூறினார்.