No products in the cart.
இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்
ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. சமையல் மட்டுமின்றி அதனுடன் நகைச்சுவையை கலந்து இந்த நிகழ்ச்சியை வழங்கினார்கள்.
அதுவே இந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. கடந்த சீசன் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில், குக் வித் கோமாளி சீசன் 6 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதுவரை சௌந்தர்யா மற்றும் கஞ்சா கருப்பு ஆகிய இரு போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகியுள்ளனர்.
இந்நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் சுற்று நடைபெற்றது. இதில் குறைவான மதிப்பெண்களை பெற்று டேஞ்சர் சோனில் இருந்த சுந்தரி அக்கா எலிமினேட் ஆகியுள்ளார். இது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்துள்ளது.