No products in the cart.
இத்தனை கோடி வசூல் தேவையா?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவுள்ள திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நாகர்ஜுனா, சௌபின் சாகிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளிவந்து வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் மோனிகா பாடல் வெளிவந்தது.
இந்த பாடலில் நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு நடனம் ஆடியிருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் திகதி திரையரங்கில் வெளியாகிறது.
திரையரங்க உரிமை, ஆடியோ உரிமை, OTT உரிமை என இதுவரை ரூ. 500 கோடி வரை கூலி படத்தின் பிசினஸ் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழக திரையரங்க உரிமை மற்றும் வட இந்திய திரையரங்க உரிமை மட்டும் விற்கவில்லை.
ப்ரீ பிசினஸிலேயே 500 கோடி ரூபா வந்துள்ள நிலையில், ரிலீசுக்கு பின் 500 கோடி ரூபா வசூல் செய்தாலே கூலி திரைப்படம் சூப்பர்ஹிட்டாகிவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. அத்தகைய வசூலை கூலி திரைப்படம் செய்து, மாபெரும் சாதனையை பாக்ஸ் ஆபிசில் படைக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.