இலங்கைசினிமா

மனைவிக்காக புதிய வீடு கட்டும் சூர்யா

நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவிற்காக பிரம்மாண்டமான புதிய வீடு ஒன்றை கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தியாகராய நகரில் சிவகுமார் குடும்பத்திற்கு சொந்தமாக பிரம்மாண்டமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில்தான் சிவகுமார் – லட்சுமி, சூர்யா – ஜோதிகா, கார்த்தி – ரஞ்சினி என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஜோதிகாவின் தாய்க்கு உடலநலம் சரியில்லாமல் போனதனால், அவரை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், பிள்ளைகளின் படிப்பிற்காகவும் சூர்யா – ஜோதிகா மும்பைக்கு சென்றனர்.

படங்களின் படப்பிடிப்பிற்காக சூர்யா, ஜோதிகா இருவருமே சென்னை வந்து செல்கின்றனர்.

ஜோதிகா சென்னை வந்தாலும் தியாகராய நகரில் உள்ள வீட்டில் தங்க மாட்டாராம், ஹோட்டலில் தான் தங்குவாராம். ஏன் அவர் சென்னையில் உள்ள வீட்டிற்கு செல்வது இல்லை என பெரும் கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், சென்னை வந்தால் தங்குவதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) பிரம்மாண்டமாக புதிய வீடு ஒன்றை ஜோதிகாவிற்காக சூர்யா கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…