No products in the cart.
நடிகைக்கு பிறந்த பெண் குழந்தை!
ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘கேம்சேஞ்சர்’ படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்தவர் கியாரா அத்வானி. பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். தற்போது ஹிருத்திக்ரோசனுடன் ‘வார் 2’ படத்தில் நடித்துள்ளார்.
கியாரா அத்வானி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த 2023 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தானில் பாரம்பரிய முறைப்படி பிரமாண்டமாக நடந்தது.
இதை அடுத்து கியாரா அத்வானி தாய்மை அடைந்திருப்பதை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். இந்நிலையில் கியாரா அத்வானிக்கு பிரசவ வலி ஏற்பட்டு மும்பை ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று மாலை அவருக்கு சாதாரண பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் சித்தார்த் மல்கோத்ரா மருத்துவமனை டொக்டர்கள், ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பெற்றோரான நட்சத்திர தம்பதிகள் சித்தார்த் மல்கோத்ரா-கியாரா அத்வானிக்கு திரை உலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.