No products in the cart.
காதலனை அறிமுகம் செய்த நடிகை!
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தியான தான்யா, தமிழில் பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலமாக அறிமுகமானார். ‘பிருந்தாவனம்’, ‘கருப்பன்’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘மாயோன்’, ‘ரசவாதி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் படங்கள் நடித்திருக்கிறார்.
தற்போது அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘பென்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளர் கௌதமுடன் நடிகை தான்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இருவரும் தற்போது திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.
இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு நடிகை தான்யா அறிவித்துள்ளார்.