கனடா

கனடாவில் லொட்டரியில் கோடிக்கணக்கில் பரிசு வென்ற முதியவர்கள் இருவர்

கனடாவில், இரண்டு முதியவர்களின் வாழ்க்கையை முழுமையாக மாற்றியுள்ளது அவர்கள் வாங்கிய லொட்டரிச்சீட்டு.

கனடாவின் கியூபெக்கில் வாழும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு பேருக்கு லொட்டரியில் பெரும் தொகை பரிசாக கிடைத்துள்ளது.

கனடாவில் லொட்டரியில் கோடிக்கணக்கில் பரிசு வென்ற முதியவர்கள் இருவர் | Two Canada Elders Won 70 Million Lottery

Montérégieயில் வாழும் Jacques Deschamps மற்றும் மொன்றியலில் வாழும் Wilhelmina Van Leeuwen ஆகிய இருவரும்தான் அந்த அதிர்ஷ்டசாலிகள்.

அதாவது, அவர்கள் இருவருமே 70 மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்த பரிசுச்சீட்டை வாங்கியுள்ளதால், அவர்கள் இருவருக்கும் ஆளுக்கு 35 மில்லியன் டொலர்கள் கையில் கிடைக்க உள்ளது.

Jacques, தனது 60 வயதுகளில் இருக்கிறார். சொந்தமாக கட்டுமானப்பணி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார் அவர்.

லொட்டரியில் பரிசு விழுந்ததைத் தொடர்ந்து, அவர் தனது பணியிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். தனது நிறுவனத்தை தனது மகனிடம் ஒப்படைக்க உள்ளார் Jacques.

Wilhelminaவோ தனது 70 வயதுகளில் இருக்கிறார். அவர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்.

இருவருக்குமே பெரிய ஆசைகள் ஒன்றுமில்லை. 35 மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளதால் உங்கள் சொந்த ஊருக்கே போய்விடுவீர்களா என Wilhelminaவிடம் கேட்டால், இல்லை என்கிறார்.

முன்பெல்லாம் வருடத்துக்கு ஒருமுறை என் சொந்த நாட்டுக்குச் செல்வேன், இனி இரண்டு முறை செல்வேன். அதுவும் விமானத்தில் முதல் வகுப்பில் பயணிக்க ஆசை என்கிறார் Wilhelmina!

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…