சினிமா

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

ஹாரி பாட்டர் படங்களில் நடித்து உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகை எம்மா வாட்சன். அந்த படத்தில் ஹெர்மாயினி கிரேஞ்சர் எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். 10 வயதில் நடிக்க வந்து, உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்தார்.

கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகிய அவர் தற்போது இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பயின்று வருகிறார்.

இந்த நிலையில், எம்மா வாட்சன் கடந்த ஆண்டு ஆக்ஸ்போர்டு நகரத்தில் 48 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில் 60 கிலோமீட்டர் வேகத்தில் தனது காரை ஓட்டி சென்றார்.

இதுகுறித்து அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் எம்மா வாட்சனுக்கு 6 மாதங்கள் வாகனம் ஓட்ட தடை விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

What's your reaction?

Related Posts

அப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!

சினிமாஅப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!May 22, 2025 - 10:14 -0மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படத்தின் இயக்குநர் ஓம்…