No products in the cart.
ரவீந்தரை கைது செய்ய வந்த மும்பை பொலிஸ்
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக, விமர்சகராக, பிக்பாஸ் போட்டியாளராக தன்னை அடையாளப்படுத்தி வந்தவர் ரவீந்தர் சந்திரசேகர்.
இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்தபிறகு தான் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆனார். இவர்கள் காதலித்தார்களா, நிஜ ஜோடியா என ரசிகர்கள் புலம்பினார்கள், ஆனால் இவர்கள் காதலுக்கு கண் இல்லை என்பதை நிரூபித்துள்ளார்கள்.
பங்குச் சந்தையில் அதிக லாபம் பெற்றுத் தருவதாக மும்பையில் அஜய் ஜெகதீஷ் கபூர் என்பவரிடம் 5.24 கோடி ரூபா மோசடி செய்த வழக்கில் மும்பை பொலிஸ் ரவீந்தரை சென்னையில் கைது செய்ய வந்துள்ளனர்.
ஆனால் ரவீந்தர் சந்திரசேகரின் உடல்நிலை காரணமாக அவரை கைது செய்யாமல் சம்மன் கொடுத்துச் சென்றுள்ளனர் மும்பை பொலிஸ்.