சினிமா

DNA படத்திற்கு வந்த சோதனை

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டிஎன்ஏ’. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கடந்த மாதம் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக உருமாறியது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்தது.

படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தை தெலுங்கு மொழியில் டப் செய்து நாளை (17) மை பேபி என்ற தலைப்பில் வெளியாக இருக்கிறது. ஆனால் இப்படத்தின் ஓடிடி அறிவிப்பை ஓடிடி அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் 19 ஆம் திகதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தெலுங்கு மக்கள் யாரும் படத்தை திரையரங்கிள் பார்க்க முன்வரமாட்டார்கள், ஏனெனில் திரைப்படம் வெளியான 24 மணி நேரத்தில் அதே திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது. இதனால் படத்தின் தெலுங்கு வசூல் பயங்கரமாக பாதிக்கப்படும். இது படக்குழுவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

What's your reaction?

Related Posts

முதல் படத்திற்காக கற்றுக்கொள்ளும் முக்கிய விஷயம்

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக கூலி திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம்…