சினிமா

தியேட்டருக்குள் ரிவ்யூ எடுக்க அனுமதிக்க வேண்டாம்

‘கிழக்கு சீமையிலே’, ‘உழவன்’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘சுயம்வரம்’, ‘அப்பு’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த விக்னேஷ், பல வருடங்களுக்கு பிறகு மாணிக்கம் தயாரிப்பில் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் ‘ரெட் பிளவர்’ படத்தில் நடித்துள்ளார்.

பட விழாவில், விஷால் கலந்துகொண்டு பேசும்போது, அவரது கைகள் நடுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. விஷால் பேசும்போது, ‘மதகஜராஜா’ படவிழாவில் கைகள் நடுங்க நான் பேசிய வீடியோ வைரலானது. படமும் பெரிய ‘ஹிட்’டானது. இன்றைக்கு மீண்டும் கைகள் நடுங்க பேசுகிறேன். எனவே இந்த ‘ரெட் பிளவர்’ படமும் ‘ஹிட்’ ஆகும்.

படங்களை விமர்சனம் செய்வது தவறில்லை. ஆனால் விமர்சிப்பவர்கள், ‘டிக்கெட்’ எடுத்து படம் பார்த்து, தனது கருத்தை சொல்லிவிட்டு பின்னர் விமர்சிக்கட்டும். அந்த விமர்சனங்களையும் தியேட்டர் வளாகங்களுக்கு வெளியே வைத்துக்கொள்வது நல்லது. ஒரு படத்துக்கு முதல் 3 நாட்கள் மிகவும் முக்கியம் என்றார்

What's your reaction?

Related Posts

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டாஸ்மாக் ஊழல் பணத்தில் இயங்கியதாக கூறப்படும் Dawn Pictures தயாரிப்பு…