இலங்கை

விளையாட்டு அமைச்சின் முன்னாள் செயலாளர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்

2015 ஜனாதிபதித் தேர்தலின்போது, அரசியல் நோக்கங்களுக்காக 14,000 கேரம் பலகைகள் மற்றும் 11,000 தாம் பலகைகளை கொள்முதல் செய்து, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் அலுவலகங்களுக்கு விநியோகித்ததன் மூலம் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளை ரத்து செய்யக் கோரி, விளையாட்டு அமைச்சின் முன்னாள் செயலாளர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவாரச்சி தாக்கல் செய்த மனுவை ஜூலை 28 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (ஜூலை 21) உத்தரவிட்டது.

இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹாந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த மனுவை ஜூலை 28 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.சட்டத்தரணி அமில குமார் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தான் ஒரு சாட்சியாக மட்டுமே பெயரிடப்பட்டதாக மனுதாரர் கூறியுள்ளார்.

அவர் அந்த வழக்கில் மேல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் தன்னை பிரதிவாதியாகப் பெயரிட சட்டமா அதிபர் எடுத்த முடிவு சட்டத்திற்கு முற்றிலும் முரணானது என மனுதாரர் வாதிட்டார்.

அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தை மனுதாரர் கோரினார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…