விளையாட்டு

இங்கிலாந்து தொடரில் இருந்து பிரபல வீரர் விலகல்?

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2 – 1 என முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டி 23 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி நேற்று (20) ஜிம் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் முழங்காலில் காயம் அடைந்தார்.

ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனால் அவர் எஞ்சிய இரு ஆட்டங்களில் விளையாடுவது கடினம் தான். எனவே அவர் இந்தப் போட்டி தொடரில் இருந்து விலகுவார் என கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் நிதிஷ்குமார் ரெட்டியின் காயம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…