No products in the cart.
3BHK படத்தின் இறுதி வசூல்
இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் 3BHK. இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து சரத்குமார் மற்றும் தேவயானி ஆகிய இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
மேலும் சித்தார்த், மீதா ரகுநாத் ஆகியோர் நடிக்க, இப்படத்தின் மூலம் கன்னட நடிகை சைத்ரா தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து யதார்த்தமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஹிட்டாகியுள்ளது.
மக்களின் ஆதரவை பெற்று வெற்றியடைந்துள்ள 3BHK திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ள 3BHK உலகளவில் 16.5 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.