இந்தியா

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜயின் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் சிறிது நேரத்திலேயே சென்னை ஈசிஆர் நீலாங்கரையில் உள்ள நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வீட்டிற்கும் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில், முதல்வரின் வீட்டில் காவல் துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.

ஆனால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.

மேலும், காவல் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அதேநேரம் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வீட்டிற்கும் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இன்று அதிகாலை சுமார் 5:30 மணியளவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த சென்னை வெடிகுண்டு நிபுணர்கள் ஈசிஆர் நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் முழுமையாக சோதனை செய்த பிறகு அது புரளி என தெரியவந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's your reaction?

Related Posts

தாயின் கண்முன்னே சிறுத்தை தூக்கிச்சென்ற சிறுமி சடலமாக மீட்பு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி (6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர். மனோஜ் முந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சைமலை…