இலங்கை

நாட்டின் மிகச் சிறந்த ஜனாதிபதி அநுர! ஆளும் கட்சி தெரிவிப்பு

நாட்டில் உருவான மிகவும் வெற்றிகரமான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சேன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் நாட்டிற்கு கிடைக்கப் பெற்ற மிகச் சிறந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான ஓர் ஜனாதிபதியை பாதுகாத்துக் கொள்ள அனைத்து வகையிலான உத்திகளையும் கையாள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மேற்கொள்ளப்படும் உத்திகள் எதுவும் நியாயமற்றதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியை பாதுகாக்கும் நோக்கில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமாரவின் பாதுகாப்பு தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக ஜனாதிபதியினதும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் பாதுகாப்பு தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்பு தேவையில்லை என கூறி ஆட்சி பீடம் ஏறிய தற்போதைய அரசாங்கப் பிரதிநிதிகள் பாதுகாப்பு பெற்றுக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…