இலங்கை

ஆயிரம் பெண் உத்தியோகத்தர்களை பொலிஸ் சேவையில் நியமிக்க தீர்மானம்!

பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், 5,000 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.

மேலும், பொலிஸ் துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது செயற்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…