உலகம்

சவுதி அரேபியாவில் இராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து

சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் நேற்று முன்தினம் (30) பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

பூங்காவில் உள்ள “360 டிகிரி” எனப்படும் அதிவேக சுழற்சி இராட்டினம் இயங்கிக்கொண்டிருந்தபோது, அதன் மையத் தூண் திடீரென இரண்டாக உடைந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூவர் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

விபத்து ஏற்பட்ட உடனே, பூங்கா ஊழியர்கள் மற்றும் அவசர சேவைப் பிரிவினர் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்து, அவர்களை அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

தாயிப் நகரில் உள்ள பல வைத்தியசாலைகள் “கோட் யெல்லோ” (Code Yellow) அவசரநிலை பிரகடனப்படுத்தி, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்தன.

இந்த விபத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. வீடியோக்களில், இராட்டினம் சுழன்று கொண்டிருக்கும்போது மையத் தூண் உடைந்து, பயணிகள் அலறியபடி கீழே விழுந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

சவுதி அதிகாரிகள் இந்த விபத்து தொடர்பாக விரிவான விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பூங்காவின் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பதை ஆராயவும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தாயிப் ஆளுநரகம் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…