இலங்கை

எல்.பி.எல் தொடருக்கான திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என்று சிறிலங்கா கிரிக்கெட் இன்று (1) அறிவித்துள்ளது. 

இம்முறை ஆறாவது லங்கா பிரீமியர் லீக் தொடர் இடம்பெறவுள்ளது. 

இந்த ஆண்டு போட்டிகள் கொழும்பு, பல்லேகலை மற்றும் தம்புள்ளை மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

வரவிருக்கும் 2026 டி20 உலகக் கிண்ண ஒத்திகையாக இந்தக் காலகட்டத்தில் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…