விளையாட்டு

சூசகமாக பதில் கூறிய எம்.எஸ்.தோனி

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது எம்.எஸ்.தோனி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும், அடுத்தாண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் என்று தோனி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி,

‘அடுத்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் வந்துவிடுவார், அவர் வந்ததும் அனைத்தும் சரியாகிவிடும். ஐபிஎல் 2025 இல் நாங்கள் சரியாக விளையாடவில்லை என்று சொல்லவில்லை. இருப்பினும் சில இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். மினி ஆக்சன் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதில் அணியில் சில வீரர்களை எடுக்க உள்ளோம்.

அடுத்த 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடும் அளவுக்கு, என்னுடைய கண்கள் நன்றாக உள்ளது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். சூட்சமம் என்னவென்றால், உடல் தகுதிக்கு இன்னும் TICK மார்க் கிடைக்கவில்லை. கண்களை வைத்து மட்டுமே விளையாட முடியாதே’ என்று கிண்டலாக தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…