விளையாட்டு

இங்கிலாந்து மண்ணில் சாதிப்பார்களா இந்திய பந்துவீச்சாளர்கள்

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.  

போட்டியில் வெற்றி பெறுவதற்கு இன்னும் 35 ஓட்டங்களே தேவை என்ற நிலையில், தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி நேற்றைய நாள் ஆட்ட நேர நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 339 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 396 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழந்தது. 

இதனையடுத்து இங்கிலாந்து அணிக்கு 374 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இங்கிலாந்து அணி சார்பில் ஜோ ரூட் 105 ஓட்டங்களையும், ஹரி புருக் 111 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்து இங்கிலாந்து அணியை தோல்வியில் இருந்து வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். 

இந்தநிலையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தீ இந்திய அணி வெற்றி பெற வேண்டுமானால், இன்னும் எஞ்சியுள்ள 4 விக்கட்டுக்களையும் 35 ஓட்டங்களுக்குள் வீழ்த்த வேண்டும். 

இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ள நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சாதிப்பார்களா என்ற எதிர்பார்ப்புகள் மேலோங்கியுள்ளது. 

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் அல்லது சமனிலையில் நிறைவு செய்தால் மாத்திரமே இந்திய அணி குறித்த டெஸ்ட் தொடரின் தோல்வியை தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…