விளையாட்டு

இலங்கையில் பயிற்சிகளில் ஈடுபடவுள்ள பங்களாதேஷ் மகளிர் அணி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கு இடையிலான உத்தியோகப்பூர்வ பயற்சிப் போட்டிகளுக்கான அமர்வுகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச மகளிர் உலக கிண்ணத் கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்தப் பயிற்சி அமர்வுகள் இடம்பெறவுள்ளன. 

இலங்கை மற்றும் இந்தியா இணைந்து 2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலக கிண்ணத் தொடரை நடத்தவுள்ளன. 

இதற்காக இலங்கை தேசிய மகளிர் அணி, பங்களாதேஷ் மகளிர் அணியுடன் எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் திகதி உத்தியோகப்பூர்வ பயிற்சிப் போட்டியிலும் அதற்கு முன்னர் இலங்கை ஏ அணியுடனான பயிற்சிப் போட்டி ஒன்றிலும் பங்கேற்கவுள்ளது. 

குறித்த போட்டிகளுக்கு முன்னதாக பங்களாதேஷ் மகளிர் அணி எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையில் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது. 

உலக கிண்ணத் தொடருக்கு முன்னர், பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எவ்வித போட்டிகளிலும் இல்லை என்பதால், இந்த பயிற்சிப் போட்டிகள் அந்த அணி பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. 

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலக கிண்ணத் தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் முதல் போட்டியில் இந்திய மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பெங்களூரில் மோதவுள்ளன.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…