உலகம்

எலான் மஸ்க் மீது கை வைத்தால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

அமெரிக்காவில் முக்கிய தொழிலதிபரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக அவர் ஆதரவு வழங்கிய நிலையில் டிரம்புக்கும், எலான் மஸ்க்கும் இடையே நட்பு உருவானது. இதன் காரணமாக டிரம்ப் தனது நிர்வாகத்திலும் எலான் மஸ்க் இடம்பிடித்துள்ளார்.

அமெரிக்க அரசின் செலவுகளை குறைக்க எலான் மஸ்க் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக பொதுமக்கள்  டெஸ்லா நிறுவனங்களை கடுமையாக தாக்கியுள்ளனர். அத்தோடு அவரது கார் ஷோரூமையும் தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் எலான் மஸ்கிற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், டெஸ்லா கார் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை  ஒன்றை விடுத்துள்ளார்.

இது குறித்து ட்ரம்ப தனது எக்ஸ் பக்கத்தில், எலான் மஸ்க் மற்றும் டெஸ்லாவை தாக்குபவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைப்பதை பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ஒருவேளை அவர்கள் எல் சால்வடாரில் உள்ள சிறைகளுக்கு கூட செல்லப்படலாம். அது எவ்வளவு மோசமாக இருக்கும் என்று நான் சொல்லத் தேவையில்லை என பதிவிட்டுள்ளார். 

What's your reaction?

Related Posts

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் டிரம்பின் அதிரடி திட்டம்

அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக…