இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக நியமனம்!

கொழும்பு மாநகர சபையின் அதிகார எல்லையில் வாழும் அனைவரினதும் எதிர்பார்ப்பு அபிவிருத்தியடைந்த நகரமொன்றை உருவாக்குவதேயாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் கொழும்பு மேயர் வேட்பாளராக வைத்திய கலாநிதி ருவைஸ் ஹனிபாவை மேயர் வேட்பாளராக முன்னிறுத்துகிறோம். தொழில் நிபுணத்துவம் வாய்ந்தவரும், திறமையானவரும், தைரியம் வாய்ந்தவரும் என சகல குணங்களும் நிறைந்த முற்போக்கு ஆளுமையாக திகழ்ந்து வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஒரு மருத்துவராக, இலவச சுகாதாரத் துறைக்கு நிபுணராக தொழில்முறை முன்னேற்றத்திற்காக சேவையாற்றியதைப் போலவே, நீர்கொழும்பு, அம்பாறை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைகளில் இலட்சக்கணக்கான நோயாளர்களு அவர் சிகிச்சையளித்துள்ளார்.

அவர் தற்போது களனி மற்றும் கொழும்பு மருத்துவ பீடங்களில் இலவசக் கல்வியை வலுப்படுத்துவதற்காக கற்பித்து வருகிறார். மேலும் அவர் குடும்ப நல சுகாதாரம் தொடர்பான பரப்பில் விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் குடும்ப நல சுகாதார கற்கையை ஆரம்பித்த ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராகவும் இவர் திகழ்ந்து வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும், வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்கும், வருமான மூலங்களை உருவாக்கும், முன்னேற்றகர அபிவிருத்தியுடன் ஜொலிக்கும் வளமான கொழும்பு நகரத்தை உருவாக்கும் பொருட்டு, உண்மையில் ஊழல், மோசடி, திருட்டு இல்லாத, ஒரு புதிய முகத்துடன், ஒரு புதிய தலைமையின் கீழ், ஒரு புதிய பயணத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி சிறந்ததொரு புத்திஜீவியையும், திறமையான நிர்வாகியையும் முன்னிறுத்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…