இலங்கை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடல், உதவி செய்தல் மற்றும் உடந்தையாக இருந்ததாக நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (6) கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அதன்படி, குறித்த வழக்கு நவரட்ண மாரசிங்க, பிரதீப் அபேரத்ன மற்றும் சுஜீவ நிசங்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இந்த வழக்கு தொடர்பில் பிரதிவாதி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், இந்த வழக்கின் சாட்சி விசாரணைகள் பிறிதொரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

அதன்படி, இந்த வழக்கின் சாட்சி விசாரணைகள் செப்டம்பர் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கில் அனைத்து பிரதிவாதிகளும் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதி குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…