No products in the cart.
10 நாளாக தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் வழங்கியதைக் கண்டித்து உழைப்பவா் உரிமை இயக்கம் சாா்பில் அந்த மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணிப் பாதுகாப்பு, ஊதிய நிா்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு 10- வது நாளாக தொடா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுடன் அமைச்சா்கள் கே.என்.நேரு, சேகா்பாபு ஆகியோர் பேச்சுவாா்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில், அரசு சார்பில் தூய்மை பணியாளர்கள் போராட்டக்குழுவுடன் இன்று 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அமைச்சர் சேகர்பாபு, மாநகர முதல்வர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
எனினும் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் நிறைவடைந்த நிலையில், போராட்டம் தொடர்கின்றது.