சினிமா

ரஜினியின் முதல் படமும், 50வது ஆண்டு படமும் வெளியாகும் ஒரே திரை

தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் என்பதையும் மீறி, இந்திய சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் என மற்ற மொழி நடிகர்களாலும் பாராட்டப்படுபவர்தான் ரஜினிகாந்த். 

அவர் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 50வது ஆண்டில் அவர் நடித்துள்ள ‘கூலி’ படம் இந்த வாரம் ஒகஸ்ட் 14ம் திகதி வெளியாகிறது. 

அவர் நடித்த முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ படம் ஒகஸ்ட் 15, 1975 அன்று வெளிவந்தது. 

சரியாக 50 வருடம் முடியும் நாளன்று ‘கூலி’ படம் வெளியாக உள்ளது. 

ரஜினியின் முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ படம் சென்னையில் மிட்லேண்ட், அகஸ்தியா, ராக்ஸி, கிருஷ்ணவேணி ஆகிய திரையரங்குகளில் வெளியானது. 

அதில் தற்போது கிருஷ்ணவேணி திரையரங்கம் மட்டுமே இருக்கிறது. மற்றவை மூடப்பட்டுவிட்டன 

சென்னை, தியாகராய நகர், பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள கிருஷ்ணவேணி திரையரங்கில் ரஜினியின் 50வது ஆண்டு திரைப்படமான ‘கூலி’ படமும் வெளியாக உள்ளது. 

இத்தனை வருடங்களாக அந்தத் திரையரங்கு இருந்து வருவதும் அதில் இந்திய சினிமாவின் முக்கிய நடிகரான ரஜினியின் முதல் மற்றும் ஐம்பதாவது வருடப் படங்களும் வெளியாவது சிறப்பம்சமாகும்.

What's your reaction?

Related Posts

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டாஸ்மாக் ஊழல் பணத்தில் இயங்கியதாக கூறப்படும் Dawn Pictures தயாரிப்பு…