No products in the cart.
ராஜஸ்தானில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் வேன் ஒன்றும் லொறி ஒன்றும் மீது மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் வேனில் பயணித்த 7 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். அடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கதுஷ்யாம்ஜி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வேன், வீடு திரும்பி கொண்டிருந்த போது லொறி மீது மோதி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வௌியிடப்படவில்லை