No products in the cart.
உக்ரைன் ஜனாதிபதி, ட்ரம்ப்பை சந்திக்கிறார்
உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
இந்த சந்திப்பானது நிகழ்நிலை ஊடாக இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைனில் போரை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து விவாதிக்க, அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, எதிர்வரும் வௌ்ளிக்கிழமை டிரம்ப் சந்திப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இடம்பெறுகின்றது.
இந்த பேச்சுவார்த்தைகள் அமைதியை ஏற்படுத்துவதற்கான சிறந்த முன்நகர்வாக அமையும் என வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.
முன்னதாக போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட ட்ரம்ப் தீர்மானித்திருந்தார்.
இதனையடுத்து, உக்ரைன் இல்லாது எட்டப்படும் எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் இறந்த முடிவுகளுக்கு சமம் என உக்ரைன் ஜனாதிபதி விமர்சித்திருந்தார்.
எனவே. அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைனும் இடம்பெற வேண்டும் என ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இதனிடையே உக்ரைன் ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி, ஜேர்மனி சென்றுள்ள நிலையில், அங்கிருந்து நிகழ்நிலை ஊடாக குறித்த கலந்துரையாடலில் பங்கேற்பார் என அறியக்கிடைத்துள்ளது.