இலங்கை

கொழும்பில் வேனில் இருந்து 10 மில்லியன் ரூபா மாயம்; திகைப்பில் நிறுவனம்

 கொழும்பில் பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பணப் பரிவர்த்தனை நிறுவனத்திற்குச் சொந்தமான வேனில் இருந்து 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள பணப் பை காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன பணப் பையில் 13,96,000 ரூபாய் இருந்ததாக கூறப்படுகின்றது.

மாயமான பணத்தில் 10,000,000 ரூபாய் செல்லுபடியாகும் நாணயம், 6,000 ரூபாய் சேதமடைந்த நாணயங்கள் மற்றும் 3,90,000 ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டொலர் ஆகியவை அடங்கும் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த வேனில் 15 பைகள் பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவற்றில் 14 பைகள் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…