No products in the cart.
இனி வாட்ஸ் அப் மூலம் 50 சேவைகளை பெறலாம்!
இந்தியாவில் அரசு சேவைக்கான கட்டணங்களைச் செலுத்துவது உள்ளிட்ட 50 சேவைகளை, மக்கள் வாட்ஸ்-ஆப் மூலம் பெறும் வகையிலான ஒப்பந்தம் தமிழக அரசு மெட்டா நிறுவனத்துக்கு இடையே கையெழுத்தாகி உள்ளது.
ஒரே ஒரு எண் மூலம் அணுகக்கூடிய வகையில் இந்த சாட்பாட் உருவாக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்தபடியே தமிழக அரசு வழங்கும் 50 அத்தியாவசிய சேவைகளைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு சேவைகளை மிக விரைவாக மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் முதற்கட்டமாக இந்த சேவை வழங்கப்படுகிறது. மின் மற்றும் குடிநீர் கட்டணங்கள், வரி, ரேஷன் கார்டு, அரசு பேருந்து டிக்கெட், மெட்ரோ டிக்கெட் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே சாட்பாட்டின் மூலம் பெறலாம். மக்களை மையமாகக் கொண்ட, உறுதியான நிர்வாகத்தை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை வழிநடத்தும் தொலைநோக்குப் பார்வையை தமிழக அரசு கொண்டிருப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், மெட்டா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருப்பது, இந்தப் பயணத்தில் ஒரு முக்கியப் படியாகும் என்றும், அதிகமானோர் பயன்படுத்தும் சமூக வலைத்தளத்துடன் இணைப்பதன் மூலம், மக்களுக்கான சேவைகளை எளிமையாகக் கிடைப்பதுடன், அதில் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒருங்கே ஏற்படும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்