No products in the cart.
கனடாவில் வீட்டு விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கனடாவில் வீட்டு விற்பனையில் சாதக மாற்றம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கனடிய வீட்டுமனை ஓன்றியம் (CREA) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த2025 ஜூலையில் வீடு விற்பனை கடந்த ஆண்டை விட 6.6% உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதங்களில் மந்தமாக இருந்த வீட்டுச் சந்தை மீண்டும் உயர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூலையில் மொத்தம் 45,973 வீடுகள் விற்கப்பட்டன, இது 2024 ஜூலையில் 43,122 காணப்பட்டது.
கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனையானது 3.8% உயர்வடைந்துள்ளது. கடந்த மாதம் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக வீடு விற்பனை அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
குறிப்பாக ரொரண்டோ பெரும்பாக பகுதியில் வீட்டு விற்பனையானது 33.5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.