No products in the cart.
அமெரிக்க ஜனாதிபதியை பாராட்டும் கனடிய பிரதமர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, கனடா பிரதமர் மார்க் கார்னி புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
ட்ரம்பின் தலைமை “ரஷ்யாவின் உக்ரைனில் முன்னெடுத்து வரும் சட்டவிரோத போரை முடிவுக்கு கொண்டுவர வாய்ப்பை உருவாக்குகிறது” என கார்னி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அலாஸ்காவில் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை சந்தித்ததன் பின்னர், போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அமெரிக்க நிர்வாகத்தின் முயற்சிகளை கார்னி பாராட்டியுள்ளார்.
நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்கு உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்கள் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க அமெரிக்காவின் திறந்த மனப்பான்மையை நான் வரவேற்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகத்தில், உக்ரைனியர்களே தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா மீதான அழுத்தங்களுடன் இராஜதந்திர முயற்சிகள் வலுப்படுத்தப்பட வேண்டும் கார்னி மேலும் தெரிவித்துள்ளார்.